அமெரிக்க தூதரின் வஞ்சப் புகழ்ச்சி
தமிழீழ மக்கள் உலகத்திடம் கேட்பது சலுகைகளல்ல. தங்கள் உரிமைகளை. அடிப்படை மனித உரிமைகளை. தமிழீழ மக்கள் மற்றவர்களை தாம் ஆளவேண்டும் என்று கேட்கவில்லை. தம்மை மற்றவர்கள் அடக்கி ஆளக்கூடாது என்று கூறுகிறார்கள். தங்களுடைய சுயநிர்ணய உரிமையை விட்டுக்கொடுக்கவோ, அதையொட்டிப் பேரம் பேசவோ அவர்கள் தயாராக இல்லை. உலகின் வேறெந்தத் தேசிய இனத்துக்கும் இல்லாத அதிகப்படி உரிமைகளை அவர்கள் கேட்கவில்லை. உலகில் ஏனைய தேசிய இனங்களுக்குள்ள உரிமைகள் தங்களுக்கும் இருந்தாகவேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். ஈழத்தமிழ் மக்கள் நடத்துவது தேசியப் போராட்டம் - மனித உரிமைப் போராட்டம். தமிழீழமும் சிறிலங்காவும் ஒன்றாகிப்போயுள்ள இலங்கைத் தீவின் மீது ஆக்கிரமிப்பு வட்டமடிக்கும் வல்லூறுகளை அமைதிப் புறாக்களாகக் காணும் மயக்கம் சிறிலங்காவுக்கு எப்போதுமே உண்டு. சிறிலங்காவைச் சார்ந்த தமிழ் ஒட்டுக்குழுக்களுக்கும் அந்தக் குழப்பம் உண்டு. தமிழீழ விடுதலைப் போராளிகள் தெளிவாக இருக்கிறார்கள். தமிழீழ மண்ணில் வாழும் தமிழ்ப் பொதுமக்களும் தெளிவாக இருக்கிறார்கள். புலத்தில் வாழும் தமிழ் மக்களும் பெரும்பாலானவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். ஆனால்…
3 கருத்துக்கள், கருத்து எழுதுக or பின் தொடர்க
இளைஞன்
நன்றாக உள்ளது.
Apr 21st, 2008
அருண்
அவசியமான ஒரு அலசல்.
Apr 21st, 2008
தீபனா
உண்மைதான். அங்குள்ளவர்கள் எப்போதும் தெளிவாகவே இருக்கிறார்கள். ஆனால், புலத்தில் வாழும் மக்கள் தெளிவாக இருக்கிறார்களா என்பது சந்தேகமே.
Apr 21st, 2008