குளவிக்கூட்டின் மீது கல்லெறிந்தால்
சிறிலங்காவின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அரசு தன்னிச்சையாகக் கைவிட்டது. வன்னிமீது விமானக்குண்டுகளைத் தீவிரப்படுத்தியது. மன்னாரிலிருந்தும் வவுனியாவிலிருந்தும் மணலாறு எல்லையிலிருந்தும் வன்னித்தளம் மீது சிறு சிறு படையெடுப்பு நடத்தியது. நீட்டுக்கணக்காக புலிகளைக் கொன்றுவிட்டதாக பெரும்பட்டியலும் நீட்டியது. ஆனால் அரசபடைகள் அங்கே நல்ல அடி வாங்கிய செய்தி இப்போ வெளிவந்திருக்கிறது. இப்போது போர் தென்னிலங்கைக்கும் பரவியிருக்கிறது. தென்கோடியும் கொழும்பும் புலியடிக்கு உள்ளாகியிருப்பதாக கொழும்பு ஏடுகள் கூறுகின்றன. ஜேவிபி’யும் தனது எதிர்ப்புப் பலத்தை அரசுக்கு காட்டத் தொடங்கிவிட்டது. புலிகள் - இந்தியா - சிறிலங்கா அரசு - மூன்றையும் ஜேவிபி எதிர்க்கிறது. புலிக்கிலி கொழும்பைப் பீடித்திருக்கிறது. கொழும்புக்கும் தென்னிலங்கைக்கும் பாதுகாப்புப் போதாது என்று சிங்கள மக்கள் குமுறுகிறார்கள். அநாவசியமாகப் புலிகளைச் சீண்டியதால் இந்த அவதி ஏற்பட்டிருக்கிறது இந்தப் பின்னணியை வைத்துக்கொண்டே குளவிக்கூட்டின் மீது கல்லெறிந்தால் …
3 கருத்துக்கள், கருத்து எழுதுக or பின் தொடர்க
அருண்
புலிக்கிலி பீடித்திருக்கிற கொழும்பு அரசுக்கு வைத்தியம் பார்க்க இந்தியாவும் மேற்குலகும் இருக்கேக்க அவைக்கு என்ன கவலை…
Apr 21st, 2008
சேனன்
“சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி” என்ற பழமொழியும் பொருந்தும் போல.
Apr 21st, 2008
சுபன்
நல்ல அலசல். தொடர்ந்து ஒலிப்பதிவுகளை இணையுங்கள்.
Apr 21st, 2008